கிரிக்கெட் (Cricket)

பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வினுக்கு அபராதம் விதிப்பு

Published On 2025-06-10 13:48 IST   |   Update On 2025-06-10 13:48:00 IST
  • திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் LBW முறையில் அவுட் ஆனார்.
  • இந்த அவுட் குறித்து பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவரில் 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரிவ்யூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரிவ்யூ எடுக்க முடியவில்லை.

இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது காலில் அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஊதியத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News