கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபியில் சதம் விளாசிய கருண் நாயர், ரகானே, ருதுராஜ் கெய்க்வாட்

Published On 2025-10-26 14:27 IST   |   Update On 2025-10-26 14:27:00 IST
  • கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
  • ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.

ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News