ஆட்ட நாயகன் விருது: சச்சின் சாதனையை நெருங்கும் விராட் கோலி
- சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
- இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.
இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.
அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.