AUSvIND.. 7 ஆண்டுக்கு பிறகு பெர்த் ஆடுகளத்தில் முதல்முறையாக நடந்த சம்பவம்
- இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 23-ந் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தில் மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.
இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டு 2018-ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு இங்கு மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். ஏற்கனவே 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.