கிரிக்கெட் (Cricket)

வாழ்வில் ஏற்றம், இறக்கம் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு: ரோகித் சர்மா

Published On 2025-03-29 16:52 IST   |   Update On 2025-03-29 16:52:00 IST
  • இந்திய அணி மூன்று ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றி பெற்றுள்ளது.
  • 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு அதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.

இந்திய அணியின் எதிர்கால திட்டத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ அவர் தொடர்ந்து கேப்டனாக செயல்பட அனுமதிக்குமா? என்பது சந்தேகம்தான். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒய்வு பெறவில்லை. ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அப்போது ரோசித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்பது தெரியும்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் எக்ஸ் பக்கத்தில் ரோகித் சர்மா பேசிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு. இந்திய அணி கடந்த 9 மாதங்களில் ஏற்றம் இறக்கத்தை சந்தித்தது. இறுதியில் சாதனைப் படைத்தது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரோகித் சர்மா அதில் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஏற்றம், இறக்கம் மற்றம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் காலம் இருக்கும். இதை எல்லா வீரர்களுக்கும் பொருந்தும். அவர்கள் ஏற்றம் இறக்கத்தை எதிர்த்துப் போராட விரும்புகிறார்கள். மீண்டு எழுகிறார்கள். அவர்கள் முன் உள்ள சாவல்களை எதிர்கொண்டு உச்சத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

நாங்கள் நியூசிலாந்து எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்தோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை. இதனால் எங்களுக்கு சற்று இறக்கம் ஏற்பட்டது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி கோப்பையை வென்றுர்மு். இந்த 9 மாதங்களும் வாழ்க்கை எப்போதும் ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.

மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி என்ன சாதனைப் படைத்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மூன்று தொடரில் ஒரேயொரு முறை, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் அணி தோல்வியடைந்துள்ளது.

மூன்று ஐசிசி தொடர்களிலும் தோல்வியை சந்திக்காமல் சென்றிருந்தால் அதை கற்பனை செய்து பாருங்கள். மிகவும் கிரேசியாக இருக்கும். ஏனென்றால், இதைப்பற்றி நாம் கேள்வி பட்டிருக்கமாட்டோம். ஆனால், 24 போட்டிகளில் 23-ல் வெற்றி பெற்றதையும் கேள்வி பட்டிருக்கமாட்மோம் என நான் எடுத்துக்கொள்வேன்.

வெளியில் இருந்து பார்க்கும்போது இது சிறப்பானதாக தெரியும், ஆனால், அணி ஏராளமான ஏற்றம் இறக்கத்தை சந்தித்துள்ளது.

நீங்கள் வெற்றியை கொண்டாடும்போது அணிக்கு கடினமான நேரமும் இருந்தது. இதுபோன்ற சாதனைகள் செய்தால் நீங்கள் கொண்டாட வேண்டும். மூன்று தொடர்களிலும் விளையாடிய அனைத்து வீரர்களும் மரியாதைக்கு தகுதியானர்கள் என உணர்கிறேன்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

Similar News