சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்: அயர்லாந்து வீரர் மகத்தான சாதனை
- முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 303 ரன்களைக் குவித்தது.
- கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆண்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி 112 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பால் ஸ்டிர்லிங் 34 ரன்களைக் கடந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.
பால் ஸ்டிர்லிங் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என 3 வடிவ போட்டிகளில் விளையாடி இதுவரை 10,017 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.