திருமணம் தள்ளிவைப்பு: மற்றொரு பெண்ணை ஸ்விம்மிங் செய்ய அழைத்த முச்சல்- வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்
- ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவ.23-ந் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
- ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் (நவ.23) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ருமிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்செய்தி ஸ்ருமிதி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கினார். இதனால் இணையவாசிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பலாஷ் முச்சல், மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணிடம், ஸ்விம்மிங் செய்ய அழைத்து Flirt செய்ததாக Reddit பக்கத்தில் வெளியான ஸ்கிரீன்ஷாட்கள்
அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ``ஸ்மிருதியை நீங்கள் லவ் பண்றீங்க தானே.. அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்'' என கேட்க, முச்சல் அதற்கு பதில் சொல்லாமல் Avoid செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது