null
பாகிஸ்தான் வீரர்- ரசிகர் இடையே மோதல்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது பரபரப்பு
- போட்டி முடிவடைந்த பிறகு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
- அப்போது ஒரு ரசிகருக்கும் குர்ஷில் ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியது.
அதன்பின் ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
போட்டி முடிவடைந்த பின்னர் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பவுண்டரி லைன் அருகே ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் வீரர் குர்ஷ்தில் ஷா, ஒரு ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது.
உடனடியாக பாதுகாவலர்கள் குர்ஷ்தில் ஷாவையும், ரசிகரையும் தனித்தனியாக இழுத்துச் சென்றனர். குர்ஷ்தில் ஷாவை பாதுகாப்பாக மைதானத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதேவேளையில் ரசிகரை மைதானத்தில் வெளியேற்றினர். இதனால் கொஞ்ச நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.