கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு- இந்திய வீராங்கனை சினே ரானா

Published On 2025-09-23 16:58 IST   |   Update On 2025-09-23 16:58:00 IST
  • 13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
  • கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி:

13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் போட்டிகள் நடக்கிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டி சவால் கள் நிறைந்து இருக்கும் என்றும், கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எங்களது இலக்கு என்றும், இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சொந்த மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொட ரில் விளையாடுவது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது சிறப்பான உணர்வை அளிக்கிறது. நீண்ட ஆண்டுகளாக ஆடி வரும் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளது மேலும் சிறப்பான விஷயம். இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக ஆடும் வாய்ப்பினை பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது. வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள உதவியது.

இவ்வாறு சினே ரானா கூறியுள்ளார்.

31 வயதான அவர் ஆல் ரவுண்டர் ஆவார்.

இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வென்றது கிடையாது. 2005 மற்றும் 2017-ல் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. 

Tags:    

Similar News