கிரிக்கெட் (Cricket)
null

ODI அதிவேக அரைசதம்: டி வில்லயர்ஸ் சாதனையை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Published On 2025-05-23 20:59 IST   |   Update On 2025-05-23 21:38:00 IST
  • 2015-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 பந்தில் டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்திருந்தார்.
  • ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ், கப்தில், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.

அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாகவே அரைசதம் விளாசினார்.

இதன்மூலம் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2015-ல் 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 10 வருடங்கள் கழித்து அவரது சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.

ஜெயசூர்யா (1996) பாகிஸ்தானுக்கு எதிராகவும், குசால் பெரேரா (2015) பாகிஸ்தானுக்கு எதிராகவும், மார்ட்டின் (2015) கப்தில் இலங்கைக்கு எதிராகவும், லிவிங்ஸ்டன் (2022) நெதர்லாந்துக்கு எதிராகவும் 17 பந்தில் அரைசதம் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News