கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்டில் 533 ரன் முன்னிலை: நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கும் இங்கிலாந்து

Published On 2024-12-07 11:27 IST   |   Update On 2024-12-07 11:27:00 IST
  • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்தது.
  • நியூசிலாந்து 125 ரன்னில் சுருண்டு பரிதாபம்.

நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து ஹாரி ப்ரூக் (123) சதத்தால் 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 125 ரன்னில் சுருண்டது. இதனால் 155 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் 92 ரன்களும், பெத்தேல் 96 ரன்களும் விளாசினர். ஹாரி ப்ரூக் 55 ரன்னில் வெளியேறினார்.

ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இங்கிலாந்து 5 விக்கெட் இழபபிற்கு 378 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

ஜோ ரூட் 73 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்யவில்லை.

நாளை காலை 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து விரைவாக ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. அல்லது ஜோ ரூட் சதம் அடித்ததும் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்யலாம். நியூசிலாந்து ஏறக்குறைய 600 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம்.

முதல் டெஸ்டில் ஏற்கனவே இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News