கிரிக்கெட் (Cricket)

முதல் டி20 போட்டியில் வெற்றி: வெஸ்ட்இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த நேபாளம்

Published On 2025-09-29 02:16 IST   |   Update On 2025-09-29 02:16:00 IST
  • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
  • இந்தப் போட்டியில் நேபாளம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

சார்ஜா:

வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.

Tags:    

Similar News