கிரிக்கெட் (Cricket)
null
வீடியோ: கோலி அனைவரையும் ஜாலியாக்கி விடுவார்- மனம் திறந்த தோனி
- விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார்.
- கோலி ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்த தோனி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது விராட் கோலி குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி சிரித்தப்படி பதில் அளித்தார்.
அதில், விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார், அதைவிட சிறப்பாக மிமிக்கிரி செய்வார். அவர் ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.
என தோனி கூறினார்.