கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

Published On 2025-09-11 11:50 IST   |   Update On 2025-09-11 11:50:00 IST
  • இந்திய அணி முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக்கோரிய உச்சநீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், நாட்டு நலனை விட கிரிக்கெடை மேலானதாக நினைக்ககூடாது என சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறட்டம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News