கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பையில் குல்தீப்பை கண்டிப்பாக களமிறக்க வேண்டும்: மதன்லால்

Published On 2025-09-04 17:56 IST   |   Update On 2025-09-04 17:56:00 IST
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது.
  • வரும் 9-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி 28-ம் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி:

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் டி20 போட்டி முறையில் நடக்கிறது.

இந்நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என முன்னாள் வீரர் மதன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதன்லால் கூறியதாவது:

திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும்.

ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.

குல்தீப் யாதவ் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் அடித்து நொறுக்குவது கடினமாக இருக்கும். அவரது தேர்வு பற்றிய இறுதி முடிவு ஆடுகளம் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும்.

துபாயில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும். இந்திய அணி தன்னுடைய திறன் காரணமாக கோப்பையை வெல்வதற்கு வலுவான அணியாக இருக்கிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News