ஜெமிமாவுக்கு சம்பவம் செய்வது புதிதல்ல.. அவரிடமே கோப்பை வாங்கிய புகைப்படம் வைரல்..!
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவரது புகைப்படம் மற்றும் அவரது தந்தையுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியிடம் ஜெமிமா வெற்றி கோப்பையை வாங்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான எம்எஸ் தோனியுடன் மகளிர் அணியின் பினிஷர் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.