கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பையா அல்லது டெஸ்ட் தொடரா?- பும்ரா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அகர்கர், கம்பீர்

Published On 2025-08-02 15:21 IST   |   Update On 2025-08-02 15:21:00 IST
  • வேலைப்பளு காரணமாக பும்ரா தொடர்ந்து விளையாடுவது கடினம்.
  • இங்கிலாந்து தொடரில் கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால்தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

பும்ராவின் வேலைப்பளு (WorkLoad) பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.

இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News