கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்..!

Published On 2025-07-04 15:32 IST   |   Update On 2025-07-04 15:32:00 IST
  • முதல் நாள் ஆட்ட முடிவில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • 2ஆவது நாளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

இந்திய அணி வீரர்கள் இணைந்து மொத்தமாகத்தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வர வேண்டும் என்பது பிசிசிஐ-யின் விதிமுறையில் உள்ளது. ஆனால், ஜடேஜா மட்டும் முன்னதாக மைதானத்திற்கு வர அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் பந்து புதியதாக இருந்ததால், நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டால் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்து பயிற்சி மேற்கொண்டதுதான்.

அணி நிர்வாகத்திடம் ஏன் சிறப்பு அனுமதி கேட்டேன் என்பது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

முன்னதாக மைதானத்திற்கு சென்று கூடுதலாக பேட்டிங் செய்தேன். ஏனென்றால், நான் 2ஆவது நாளில் கூடுதலாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால். ஏனென்றால், பந்து புதிதாக இருந்தது. நியூ பால்-ஐ பார்க்க முடியும் என்றால், இன்னிங்சில் தொடர்ந்து விளையாட அது எளிதாக இருக்கும். இங்கிலாந்தை பொறுத்தவரை நாம் அதிக ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. பந்து எந்த நேரத்தில் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆகும்.

இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

முதல்நாளில் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 2ஆவது நாள் ஆட்டத்தின்போது 89 ரன்னில் அவுட் ஆனார். சுப்மன் கில் உடன் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News