இந்தியாவுக்கு எதிராக விளையாட இதுதான் சரியான Timing... மிட்செல் மார்ஷ்
- ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
- இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள். ஒரு அணியாக நாங்கள் அவர்களுக்கு மிகுந்த போட்டித்தன்மையையும் மிகுந்த மரியாதையையும் கொண்டுள்ளோம். ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உண்மையில் சரியான நேரம். இது மிகப்பெரியதாக இருக்கும்.
என மார்ஷ் கூறினார்.