ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது இளம் தொடக்க ஜோடியான ஆயுஷ் மாத்ரே- ரஷீத்

Published On 2025-04-25 21:45 IST   |   Update On 2025-04-25 21:45:00 IST
  • ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயது 283 நாட்கள் ஆகிறது.
  • ஷேக் ரஷீத்துக்கு 20 வயது 213 நாட்கள் ஆகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 154 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரேவும், ஷேக் ரஷீத்தும் களம் இறங்கினார்கள். இருவருக்கும் சேர்த்து 38 வயது 141 நாட்கள் ஆகிறது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் 2ஆவது மிகவும் இளம் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர். ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயது 283 நாட்கள் ஆகிறது. ஷேக் ரஷீத்துக்கு 20 வயது 213 நாட்கள் ஆகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி- ஜெய்ஸ்வால் ஜோடி லக்னோவிற்கு எதிராக 37 வயது 145 நாட்களில் களம் இறங்கி மிகவும் இளம் தொடக்க ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரிஷப் பண்ட்- சஞ்சு சாம்சன் (டெல்லி) ஆர்பிஎஸ் (2016) அணிக்கு எதிராக 40 வயது 34 நாட்களில் தொடக்க ஜோடியாக களம் இறங்கினர்.

ரிஷப் பண்ட்- டி காக் (டெல்லி) குஜராத் லயன்ஸ் (2016) அணிக்கெதிராக 41 வயது 359 நாட்களில் களம் இறங்கினர்.

பிரித்வி ஷா- ஷ்ரேயாஸ் அய்யர் (டெல்லி) சிஎஸ்கே-வுக்கு (2018) எதிராக 41 வயது 364 நாட்களில் களம் இறங்கினர்.

Tags:    

Similar News