ஐ.பி.எல்.(IPL)

கை கொடுக்க வந்த ஹர்திக்.. கண்டுக்காமல் சென்ற கில்.. வைரலாகும் Ego Clash வீடியோ

Published On 2025-05-31 15:13 IST   |   Update On 2025-05-31 15:13:00 IST
  • எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் நேற்று மோதின.
  • இந்த போட்டியில் கில், பாண்ட்யா இடையே ஈகோ மோதல் வெளிப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முல்லான்பூர்:

ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 போட்டியில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இந்தப் போட்டிக்கான டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்றார். உடனே எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். அந்த நிகழ்வை ஹர்திக் பாண்டியா சமாளித்து விட்டார்.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடத் தொடங்கியது. அப்போது சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார்.

சுப்மன் கில் மீது கோபத்தில் இருந்ததால்தான் ஹர்திக் பாண்டியா இவ்வாறு செய்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் சிலர் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனான கெத்தில் இதெல்லாம் செய்வதாக கூறி வருகின்றனர்.

சுப்மன் கில் இதற்கு முன்பும் இதே போல எதிர் அணி கேப்டன்களுக்கு கை கொடுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு முன், ரிஷப் பண்ட் ஒரு போட்டியின் முடிவில் பேசுவதற்கு வந்த போது சுப்மன் கில் அவரைத் தவிர்த்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News