ரிஷப் பண்ட் அணிக்கு ஆதரவு- மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஊர்வசி ரவுடேலா
- பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்ததாக ஏற்கனவே ஊர்வசி கூறி சர்ச்சையை கிளப்பினார்.
- பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர் என ரிஷப் பண்ட் கூறினார்.
ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela) ஒரு பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான தருணங்களால் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளார். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்உடனான சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் அவரை கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற வைத்தன.
2022-ம் ஆண்டு, ஊர்வசி ஒரு நேர்காணலில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க ஹோட்டலில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். இதை அவர் "RP" என்று மறைமுகமாக குறிப்பிட்டதால், பலரும் அதை ரிஷப் பண்ட் உடன் தொடர்புபடுத்தினர்.
இதற்கு பதிலடியாக, ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளத்தில் "பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர்" என்று பதிவிட்டு, ஊர்வசியை மறைமுகமாக விமர்சித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குதான் தன்னுடைய ஆதரவு என ஊர்வர்சி ரவுடேலா தெரிவித்துள்ளார். இது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார். அவரை வழபிலுக்கும் விதமாக இதை கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.