ஐ.பி.எல்.(IPL)

இளம் வீரர்களை ஏலம் எடுக்காதது தான் சிஎஸ்கே-வின் இந்த நிலைக்கு காரணம்: ரெய்னா ஆதங்கம்

Published On 2025-04-21 20:32 IST   |   Update On 2025-04-21 20:32:00 IST
  • இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன்.
  • சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம்தான் காரணம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கூறியதாவது:-

இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன். ப்ரியன்ஷ் ஆர்யா போன்ற நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் ஏலத்தில் இருந்தனர். சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது. அப்படி இருந்தும் ஷ்ரேயஸ், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையும் நீங்கள் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு தடுமாறி நான் பார்த்ததே இல்லை.

தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இது சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

என்று ரெய்னா கூறினார்.

Tags:    

Similar News