பாண்ட்யாவுடன் ஈகோ மோதலா? இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அன்பை வெளிப்படுத்திய கில்
- எலிமினேட்டர் போட்டியில் பாண்ட்யா- கில் இடையே ஈகோ மோதல் வெளிப்பட்டதாக வீடியோ வைரலானது.
- ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்த போது கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார்.
முல்லான்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். இதனை தொடர்ந்து சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.
இந்நிலையில் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை (இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்) குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யாவை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் கில் ஸ்டோரி வைத்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.