ஐ.பி.எல்.(IPL)

ஷஷாங்க் சிங் அடித்த பிரம்மாண்ட சிக்ஸ் - பிரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரல்

Published On 2025-05-05 07:03 IST   |   Update On 2025-05-05 07:03:00 IST
  • மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியேறியது.
  • புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் மயங்க் யாதவ் வீசிய 17வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடித்த சிக்சர் 92 மீட்டர் தூரத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பஞ்சாப் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Tags:    

Similar News