ஐ.பி.எல்.(IPL)

ஆர்சிபி-யின் வெற்றி பேரணி ரத்து.. ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2025-06-04 14:07 IST   |   Update On 2025-06-04 14:07:00 IST
  • மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை ஆர்சிபி அணியினர் சந்திக்கின்றனர்.
  • மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.

மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு வந்து சேரும் ஆர்சிபி அணி, மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூருவில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை கைவிரித்ததால் அந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News