ஐ.பி.எல்.(IPL)

14 வயது வீரர் வைபவ் அதிரடி சதம்- 15.5 ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அபார வெற்றி

Published On 2025-04-28 23:04 IST   |   Update On 2025-04-28 23:04:00 IST
  • ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
  • வைபவ் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.

அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

Similar News