null
அனல் பறந்த ஆர்சிபி பந்து வீச்சு- 60 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் திணறல்
- பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 18 ரன்கள் எடுத்தார்.
- ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர் 1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பஞ்சாப்பின் ஒரே ஒரு நம்பிக்கையாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஓமர்சாய் உள்ளனர். இவர்களும் வெளியேறினால் பஞ்சாப் 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும்.