ஐ.பி.எல்.(IPL)

சூப்பர் மேன்களாக மாறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் - ஏன் தெரியுமா?

Published On 2025-04-22 11:29 IST   |   Update On 2025-04-22 11:29:00 IST
  • ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.
  • வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.

தாமதமாக வரும் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவ்வாறு நூதன தண்டனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News