ஐ.பி.எல்.(IPL)

IPL வரலாற்றின் மிக சிறந்த கேட்ச்?.. பிரேவிஸ் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த கமிந்து மெண்டிஸ் - வீடியோ

Published On 2025-04-26 06:51 IST   |   Update On 2025-04-26 06:51:00 IST
  • சி.எஸ்.கே. அணியில் அறிமுகமான பிரேவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
  • கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து கேப்டன் கம்மின்ஸ் அவரை மேலே தூக்கி பாராட்டினார்.

ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்ரே 19 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட்டானார். பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட், அனிகெட் வர்மா தலா 19 ரன்கள் எடுத்தார்.

கமிந்து மெண்டிஸ், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், ஐதராபாத் 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சி.எஸ்.கே. அணியில் அறிமுகமான பிரேவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

குறிப்பாக கமிந்து மெண்டிஸ் வீசிய 12ஆவது ஓவரில் பிரேவிஸ் 3 சிக்ஸ் விளாசினார். ஹர்ஷல் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு கிச்ஸ் அடித்தார். அதே ஓவரில் அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சிக்க பவுண்டரி லைனில் கமிந்து மெண்டிஸ் சூப்பர் மேன் போல பறந்து கேட்ச் பிடித்தார். இதனால் பிரேவிஸ் 25 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து கேப்டன் கம்மின்ஸ் அவரை மேலே தூக்கி பாராட்டினார்.

கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச் இந்த சீசன் மட்டுமல்ல மொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிக சிறந்த கேட்ச் என நெட்டிசன்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

மேலும், கமிந்து மெண்டிஸ் கேட்ச் பிடித்ததை பார்த்து ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது. 

Tags:    

Similar News