ஐ.பி.எல்.(IPL)

4 அரைசதங்களுடன் 329 ரன்கள்: ஆரஞ்ச் தொப்பியை தன் வசமாக்கினார் சாய் சுதர்சன்

Published On 2025-04-12 18:33 IST   |   Update On 2025-04-12 18:33:00 IST
  • 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 329 ரன்கள் குவித்துள்ளார்.
  • நிக்கோலஸ் பூரன் 2ஆவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி வருகிறார்.

லக்னோவிற்கு எதிராக இன்றைய போட்டியில் அரைசதம் விளாசினார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 329 ரன்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் அதிக ரன்கள் குவிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை தன் வசமாக்கியுள்ளார். நிக்கோலஸ் பூரன் 288 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News