ஐ.பி.எல்.(IPL)

பவர்பிளே பேட்டிங், பந்து வீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது: ருதுராஜ் வேதனை..!

Published On 2025-04-05 20:22 IST   |   Update On 2025-04-05 20:22:00 IST
  • நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் அல்லது அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. கண்டிசனை சிறப்பாக பயன்படுத்தினர்.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்னில் தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 183 ரன்கள் குவித்தது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியால் 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

தோல்வி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

கடந்த சில போட்டிகளில் இருந்து முடிவுகள் நாங்கள் நினைத்த வழியில் செல்லவில்லை. முன்னேற்றம் காண முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுக்க முயற்சி செய்கிறோம். இருந்தாலும் எங்களுடைய வழியில் செல்ல முடியவில்லை. உறுதியாக நாங்கள் தொடக்கத்தில் ஏராளமான விக்கெட்டுகளை இழந்து விட்டோம். பவர்பிளேயில் பேட்டிங் மட்டுமல்ல, பந்து வீச்சு துறையிலும் மிகப்பெரிய கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் அல்லது அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நடக்கவில்லை. பவர்பிளேயில் யார் பந்து வீச வந்தாலும் உங்களுக்கு சிறிய கவலை இருக்கிறது. அல்லது சந்தேகம் ஏற்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. கண்டிசனை சிறப்பாக பயன்படுத்தினர். ஷிவம் துபே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து உத்வேகத்தை எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை.

இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

Tags:    

Similar News