ஐ.பி.எல்.(IPL)

இந்த காலத்தில் ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் இருப்பது பாக்கியம்: ஜெய்ஸ்வால்

Published On 2025-04-05 16:54 IST   |   Update On 2025-04-05 16:54:00 IST
  • ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நினைக்கிறேன்.
  • ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்து கொண்டு அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான மனிதரை பெற்றிருப்பது பாக்கியம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராகுல் டிராவிட் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

ராகுல் டிராவிட் நம்ப முடியாத அசாத்தியமான மனிதர். ராகுல் டிராவிட்டை போன்ற ஒருவரை இந்த காலக்கட்டத்தில் பெற்றிருப்பது பாக்கியம். ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்.

அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். வீரர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதையும் உறுதிசெய்கிறார். இது தனிப்பட்ட வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் மிகவும் முக்கியமானது.

கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை எப்படி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொள்ள அவரை நெருக்கமாக பார்ப்பது ஒரு வாய்ப்பாகும். அவர் பல ஆண்டுகளாக இவ்வளவு நேர்த்தியையும் அமைதியையும் பராமரித்து வருகிறார். மேலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

இவ்வாறு ஜெய்ஸ்வால் ராகுல் டிராவிட்டை புகழ்ந்து கூறினார்.

Tags:    

Similar News