ஐ.பி.எல்.(IPL)
null

LSG Vs MI: ரிஷப் பண்ட், திக்வேஷ் சிங் ரதிக்கு அபராதம்

Published On 2025-04-05 12:38 IST   |   Update On 2025-04-05 12:43:00 IST
  • ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. விக்கெட் எடுத்துவிட்டு Notebook Celebration-க்காக திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்குமுன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இதே விதமான Notebook Celebration-க்காக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News