ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு

Published On 2025-05-24 19:02 IST   |   Update On 2025-05-24 19:02:00 IST
  • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
  • இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

Tags:    

Similar News