ஐ.பி.எல்.(IPL)

ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே

Published On 2025-05-20 21:22 IST   |   Update On 2025-05-20 21:22:00 IST
  • ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஊர்வில் படேல் 0 ரன்னில் அவுட் ஆனார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் தோனியும் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News