null
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி- இந்திய அணி புதிய சாதனை
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 9-வது முறையாக இந்தியா 100 ரன்னுக்கு வெற்றியை பெற்று சாதனை படைத்தது. ஐ.சி.சி. முழு நேர உறுப்பினர்களின் வேறு எந்த அணியும் 9 முறை இது மாதிரியான வெற்றியை பெற்றது கிடையாது. மற்ற அணிகள் 4 தடவைதான். 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.
கனடா அணி அதிகபட்ச மாக 10 தடவை 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 2023-ம் ஆண்டு நியூசிலாந்தை 168 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாகும்.
தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது. வேறு எந்த ஐ.சி.சி. முழு நேர நாடுகளும் இப்படி தோற்றது இல்லை. இந்தியாவிடம் மட்டும் 3-வது தடவையாக 100 ரன்னுக்கு மேல் தோற்றது. 74 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்காவின் குறைந்த பட்ச ஸ்கோராகும்.
2 விக்கெட் கைப்பற்றிய தன் மூலம் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்தார். முதல் 6 ஓவரில் (பவர் பிளே) புவனேஷ்வர் குமார் 47 விக்கெட்டுகளை (1152 பந்துகள்) வீழ்த்தி இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
அர்ஷ்தீப் சிங் 750 பந்துகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றி சமன் செய்தார். பும்ரா முதல் 6 ஓவரில் 33 விக்கெட் (840 பந்து) எடுத்து 3 -வது இடத்தில் உள்ளார்.