கிரிக்கெட் (Cricket)

நம்பர் 1 தான் நோக்கம்.. கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த உமேஷ் யாதவ்

Published On 2025-06-20 15:39 IST   |   Update On 2025-06-20 15:39:00 IST
  • டெஸ்ட் கிரிகெட்டில் விராட் கோலி ஒரே நோக்கம் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.
  • நாம் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடப் போவதில்லை.

லீட்ஸ்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் விராட் கோலியின் நோக்கமாக இருந்தது என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி டெஸ்ட் கேப்டனானபோது, அவரின் ஒரே நோக்கம் டெஸ்ட் கிரிகெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். நாம் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடப் போவதில்லை. எங்கு சென்றாலும் வெல்ல வேண்டும். நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என அனைத்து வீரர்களிடமும் கூறினார்.

என உமேஷ் யாதவ் கூறினார்.

Tags:    

Similar News