கிரிக்கெட் (Cricket)

3ஆவது டி20: டாஸ் வென்றதும் சூர்யகுமார் யாதவின் ரியாக்ஷன்

Published On 2025-11-02 14:48 IST   |   Update On 2025-11-02 14:48:00 IST
  • ஆசிய கோப்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் டாஸ் தோற்று வருகிறது.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இருந்து இந்தியா டாஸ்-ஐ தொடர்ந்து தோற்று வருகிறது.

இந்த நிலையில்தான் இன்றைய 3ஆவது போட்டியில், சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றார். அத்துடன் வெற்றி பெற்றது போன்று கையை கட்டினார். மேலும், பூஜை போட்டது வேலை செய்துவிட்டது என்பது போன்று சைகை காட்டினார்.

பின்னர் சிரித்துக் கொண்டு மிட்செல் மார்ஷை சூர்யகுமார் யாதவ் கட்டிப்பிடித்தார்.

Tags:    

Similar News