கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

Published On 2025-06-12 11:37 IST   |   Update On 2025-06-12 11:37:00 IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன.
  • கோப்பையை வெல்லும்அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும்.

இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.

Tags:    

Similar News