கிரிக்கெட் (Cricket)

WTC இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

Published On 2025-11-26 18:13 IST   |   Update On 2025-11-26 18:13:00 IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது.
  • இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.

Tags:    

Similar News