கிரிக்கெட் (Cricket)

நாட்டுக்காக இதைச் செய்வோம்- சக வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்த ரிஷப் பண்ட்

Published On 2025-07-28 15:54 IST   |   Update On 2025-07-28 15:54:00 IST
  • கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரை 2-2 என சமன் செய்ய வெற்றி பெற வேண்டும் என்று சக வீரர்களுக்கு ரிஷப் பந்த் ஆலோனை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தனிப்பட்ட இலக்கைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, எங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய அல்லது அணியை முன்னோக்கி நகர்த்த என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் எனக்கு ஆதரவளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. மேலும் எங்கள் அணி அழுத்தத்தில் இருந்தது. ஆனால் முழு நாடும் ஒரே காரணத்திற்காக உங்கள் பின்னால் நிற்கும்போது, அதற்காக நீங்கள் உங்களின் முழு முயற்சியையும் வழங்க வேண்டும்.

என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்ற உணர்ச்சியை விளக்குவது மிகவும் கடினம். என் அணிக்கு நான் சொல்லப்போகும் ஒரே செய்தி, வெற்றி பெறுவோம் நண்பர்களே. நாட்டுக்காக இதைச் செய்வோம்.

என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News