கிரிக்கெட் (Cricket)

தோனியுடன் நேரம் செலவிடப் போவதை நினைத்தாலே.. உற்சாகத்தில் சஞ்சு சாம்சன்

Published On 2025-11-22 12:08 IST   |   Update On 2025-11-22 12:08:00 IST
  • டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியது.
  • அவருக்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை விட்டுக்கொடுத்தது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

மேலும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக பரிமாற்றம் (டிரேடிங்) மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா (ரூ.14 கோடி), சாம் கர்ரன் (ரூ.2.4 கோடி) ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கேவில் தோனியுடன் நேரம் செலவிடப் போவதை யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

மேலும் "தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன். யோசிச்சாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எனவும் கூறினார்.

Tags:    

Similar News