20-25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், No.8 ஹர்சித் ராணாவுக்கு சிறந்த இடமாக இருக்கும்: சுப்மன் கில்
- 8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
- அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
ஹர்சித் ராணாவை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக்க அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியில் மூன்று வடிவிலான அணியில் விளையாடும் வீரர்கள் ஒருவர் அவர். சுப்மன் கில்லுக்குப்பின் அவர்தான் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், சிட்னி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் 20 முதல் 25 ரன்கள் அணிக்கு பங்களிக்க முடியும் என்றால், ஹர்சித் ராணாவுக்கு No.8 சிறந்த இடமாக இருக்கும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹர்சித் ராணா குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதன்பிறகு அது முக்கியமான இடமாக அமையும்.
அதிக உயரம் கொண்ட சில வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். தென்ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில், இது போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
ஏனென்றால், மிடில் ஓவர்களில் பந்து அதிக அளவில் ஸ்விங் (Move) ஆகாது என்பதை நாம் பார்த்திருப்போம். ஆகவே, நல்ல உயரம் மற்றும் வேகம் கொண்டிருந்தால், உங்களால் விக்கெட்டுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும். அதான் சிட்னியில் நடந்தது என நினைக்கிறேன்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.