கிரிக்கெட் (Cricket)

கை குலுக்க மறுத்த விவகாரம்: நடுவரை நீக்க கோரிக்கை விடுத்த பாகிஸ்தான்- நிராகரித்த ஐசிசி

Published On 2025-09-16 15:44 IST   |   Update On 2025-09-16 15:44:00 IST
  • டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை.
  • போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்ளவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.

இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமாருடன் கைக் குலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் ஆண்டி பைகிராஃப்ட் அறிவுறுத்தியதாக PCB குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News