கிரிக்கெட் (Cricket)

கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா

Published On 2025-11-13 18:00 IST   |   Update On 2025-11-13 18:00:00 IST
  • ஆசிய கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது.
  • காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாண்ட்யா விளையாடவில்லை.

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News