கிரிக்கெட் (Cricket)

கைகுலுக்க மறுத்த விவகாரம்: நடுவரிடம் பேசிய வீடியோவை வெளியிட்டது விதிமீறலா?- பாகிஸ்தான் விளக்கம்

Published On 2025-09-20 15:17 IST   |   Update On 2025-09-20 15:17:00 IST
  • கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவரை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது.
  • இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பை பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் நயீம் கிலானி வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் பயன்பாடு குறித்தும் ஐ.சி.சி.க்கு தெரிவிக்கப்படாத நிலையில், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியதாக ஐ.சி.சி.குற்றம்சாட்டியது.

இதற்கிடையே ஆண்டி பைகிராப்ட், கேப்டன் சல்மான் ஆகா, மேலாளர் நவீத் அக்ரம் சீமா இடையேயான சந்திப்பின் போது தங்களின் ஊடக மேலாளா் உடன் இருந்ததும், அதை வீடியோ பதிவு செய்ததும் விதிமீறல் இல்லை என்று பாகிஸ்தான் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது ஐ.சி.சி.யால் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டதே என்றும், ஊடக மேலாளா் தங்கள் அணியின் ஒரு அங்கமே என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News