கிரிக்கெட் (Cricket)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்

Published On 2025-07-03 09:56 IST   |   Update On 2025-07-03 09:56:00 IST
  • 2 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
  • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

ரோகித் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற சுப்மன் கில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இதன்மொல்லாம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 4 ஆவது இந்திய கேப்டன் என்ற பெருமையை கில்பெற்றுள்ளார். இதற்கு முன்பு, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

SENA நாடுகளுடன் இதற்கு முன் விளையாடிய 29 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்காத கில், கேப்டனாக விளையாடிய மூன்றே இன்னிங்ஸ்களில் 2 சதங்களை விளாசியுள்ளார். இது அவருக்கு 7வது டெஸ்ட் சதமாகும்.

Tags:    

Similar News