கிரிக்கெட் (Cricket)

பெர்த் டெஸ்ட்: இந்தியாவை 150 ரன்னில் சுருட்டிய ஆஸ்திரேலியா

Published On 2024-11-22 12:49 IST   |   Update On 2024-11-22 12:49:00 IST
  • அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும் ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பந்துகளை தடுத்தும், பந்து பின்னல் விட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.எல். ராகுல் மட்டும் அவ்வப்போது ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் ரன்கள் எடுக்க திணறினார். இறுதியாக 23 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா 14 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேஎல் ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜூரல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து ரிஷப் பண்ட்- நிதிஷ் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். ரிஷப் பண்ட் 37 ரன் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்சித் ரானா 7, பும்ரா 8 என நடையை கட்டினர். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதிஷ் ரெட்டி அதிரடி காட்டினார். இறுதியில் அவர் 41 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டும் ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News