கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 301 ரன்னில் ஆல் அவுட்

Published On 2024-12-27 19:54 IST   |   Update On 2024-12-27 19:54:00 IST
  • கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார்.
  • பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். டோனி டி ஜோர்ஜி 2, ரிக்கல்டன் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரை சதம் விளாசினர்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 89 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 301 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 91 ரன்கள் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News